இயக்குனர் - ஷுசுகே கண்கோ
ஜப்பானிய நம்பிகையின் படி நம் இறப்பை தீர்மானிப்பது ஷிநிகாமி எனப்படும் ஒரு வகை குட்டிச்சதங்கள் தான். அது தன் கையில் வைத்திருக்க வேண்டிய டெத் நோட் எனப்படும் புத்தகத்தில் ஆயுள் முடிந்தவரின் பெயரை எழுதி அவர் எப்படி இரக வேண்டும் என்று குறிப்பிட்டால் அது உடனே நடக்கும்.
இந்த படத்தில் அதில் ஒரு புத்தகம் தவறி பூமியில் விழுகிறது அது யகாமி லைட் என பெயர் கொண்ட ஒரு பள்ளி மாணவனிடம் கிடைகின்றது முதலில் விளையாட்டாக நினைத்தாலும் பிறகு அதன் தன்மையை புரிந்துகொள்கிறான்.
இந்த புத்தகத்திற்குஎன ஏகப்பட்ட விதிகள் உள்ளன எழுது பெயர் அவர்களது உண்மையான பெயராக இருக்கவேண்டும், எழுதும் பொது அவர்களின் முகத்தை மனதில் நினைக்க வேண்டும், பெயர் எழுதிய 40 வினாடிக்குள் அவர் எப்படி இரக வேண்டும் என்பதை எழுத வேண்டும் இல்லையேல் பெயர் எழுத பட்டவர் மாரடைப்பில் இறந்துவிடுவார் , எல்லாவற்றிற்கும் மேல் இந்த புத்தகம் யாரிடம் கிடைக்கிறதோ அவர்கள் இறக்கும் வரை அந்த புத்தகத்திற்கு சொந்தமான ஷிநிகாமி கூடவே இருக்கும்.
இந்த புத்தகம் கிடைத்த மாணவன் யகாமி உலகில் உள்ள கெட்டவர்கள் அனைவரையும் கொன்றுவிட வேண்டு என்று முடிவு எடுக்கிறான். தன் அப்பா போலீஸ் அதிகாரி என்பதால் குற்றவாளிகள் பெயர் கிடைப்பதில் அவனுக்கு பிரைச்சனை இல்லை. ஒரே நாளில் சிறையில் இருக்கும் பல நூறு கைதிகள் மாரடைப்பில் இறந்து போகின்றனர். இதில் அனேகம்பேர் ஜப்பானில் இறகின்றனர். தன் பெயரை கீரா என வெளிபடுத்துகிறான். இந்த இறப்பை பற்றி துப்பறிய வரும் யல் (L) மிகவும் புத்திசாலி. சில மணி நேரத்திலேயே எந்த ஊரை சேர்த்தவன் இதை செய்கிறான் என்று கண்டுபிடிக்கிறான். அதன் பிறகு இரண்டு புத்திசாலிகளுக்கு இடையில் நடக்கும் யுத்தம் ஒரு சதுரங்க விளையாட்டைபோல் விறுவிறுப்பாக செல்கிறது. ஒரு கட்டத்தில் யல் (L) தன்னை நெருங்கிவிட்டதை அறிந்த யகாமி தான் தப்பிக்க தன்னுடைய காதலியை கொலை செய்வதோடு படத்தில் முதல் பாகம் நிறைவடைகிறது.
இரண்டாம் பாகத்தில் விறுவிறுப்பு இரட்டைமடங்காகிறது. இன்னொரு ஷிநிகாமியும் தன் புத்தகத்தை பூமியில்விட அது ஒரு பெண்ணிடம் கிடைகிறது வஞ்சனையாக அந்த புத்தகத்தையும் அபகரிக்கும் யகாமி ஒரு கட்டத்தில் அந்த புத்தகத்துடன் வந்த குட்டிசட்டனையே கொலை செய்யும் அளவிற்கு கொடூரமானவனாக மாறுகிறான். முற்றிலும் விறுவிறுப்பாக செல்லு கதையில் யால் (L) யகாமியை பிடிக்க முடிந்ததா எனபது தன் முடிவு.
(எனது பரிந்துரை)
மூன்று பாகங்கள் கொண்ட இந்த படத்தில் இரண்டு பாகம் மட்டுமே பார்த்தல் போதுமானது. படத்தை விட இன்னும் விறுவிறுப்பு தேவைபட்டால் டெத் நோட் என அதே பெயர் கொண்ட அனிமேஷன் தொடரை பார்க்கலாம் 37 பாகங்கள் கொண்ட அது என்னை பொறுத்த வரை படத்தைவிட சிறந்தது.
3 comments:
நல்ல படம் மூன்றாம் பாகத்தை பற்றியும் கொஞ்சம் எழுதி இருக்கலாம் .
>>அஞ்சா சிங்கம் said...
நல்ல படம் மூன்றாம் பாகத்தை பற்றியும் கொஞ்சம் எழுதி இருக்கலாம் .<<
மூன்றாம் பாகம் உண்மையான கதை கிடையாது அது மட்டும் இல்லாமல் அவளவு விறுவிறுப்பு இருக்காது ..
click to read
====> நடிகர் விவேக்கும் சாமி சாணிசித்தரும். <=====
Post a Comment