Sunday, March 20, 2011

இல்லாதவருக்கு கொடுத்தால் என்ன?சாப்பிட்டது  செறிக்க, தினமும் பீச்ளையும் பூங்காகள்ளையும் ஓட்டமா ஓடுறவங்களுக்கு ஒரு கேள்வி.( இதில் நான் மட்டும் விதிவிலக்கு அல்ல)


ஒரு வேல சாப்பாடு கூட இல்லாதவங்கள பத்தி நினச்சு பாத்துருகோமா?

என்னிடம் பிச்சை கேட்ட ஒரு சிறுவனை அருகில் இருந்த bakery'கு அழைத்து சென்று சாப்பிட வாங்கி கொடுத்த அனுபவம் எனக்கு உண்டு என்னால் அப்போது முடிந்தது அவ்வளவுதான். கண்ணில் படுகிற அனைவர்க்கும் நம்மால் உதவ முடியாது ஆனால் நாம் தினமும் பார்க்கும் அல்லது நம் வீடு அருகில் இருப்பவர்களுக்காவது நாம் உதவலாமே !!

இந்த குறும்படத்தை பார்த்ததில் இருந்து என் மனம் ஏனோ உறுத்துகிறது.. இது வெறும் கதையாக எனக்கு தெரியவில்லை. இதைபோல சம்பவத்தை நான் நேரிலேயே பார்த்ததுண்டு. நான் மட்டும் அல்ல உங்களில் பலரும் இது போன்ற ஒரு சம்பவத்தை பார்த்திருப்பீர்கள். அப்போது நமது உணர்ச்சி எவ்வாறு இருக்கும்?

இல்லாதவர்களை போல நடித்து வங்கி கணக்கு வைத்து A.T.M பயன்படுத்துபவர்களும்  உண்டு.


அதற்காக அனைவரையும் அப்படி நினைப்பது தவறு.
  

Tuesday, March 15, 2011

நண்பேண்டா !!!!!!!!!!அது ஒரு வார கடைசி நாள். நல்லா  9 மணி வரை தூங்கிட்டு அப்போதான் எழுந்து பள்ள வேலகிட்டு இருந்தேன் அப்போதான் வந்தது அந்த போன் கால்..
போன ஆண் பண்ணி காதுல வச்சது தான் தெரியும் கொஞ்சம் கூட இடைவெளி இல்லாம கெட்ட வார்த்தையா வந்தது. நானு சார் யாரு சார் நீங்க எது கு திட்ரிங்க சொல்லிடு திட்டுங்கனு எவ்ளோ சொல்லி பாத்துட்டேன் அந்த ஆளு கேட்கிற மாதிரி இல்ல. கொஞ்ச நேரத்துல அவனே திட்டி டயர்ட்  ஆய்ட்டான் கடைசியா அந்த ஆளு சொன்னான் - "மவனே போன் நம்பர் வச்சி வீட கண்டுபிடிக்க முடியாத? இன்னும் ஒருமணி நேரத்துல உன்வீட்டுக்கு வரேண்ட, வந்து உன்ன அடிச்சு போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துட்டு போறேண்டா " அப்புடின்னு சொல்லிடு போன வச்சிட்டான்.

நானும் ஒரு கால் மணிநேரமா அவன் எதுக்கு திட்டுனான் எதுக்கு போலீஸ்கிட்ட புடிச்சி குடுக்க போறான்னு யோசிச்சி யோசிச்சி தலை வழியே வந்திடுச்சு. அப்போ முகத்துல சிரிப்போடு எங்க வீட்டுக்குள் நுழைத்தான் ஏன் நண்பன் குமார். ரொம்ப சந்தோஷமா பாட்டு பாடிகிட்டே வந்து உக்காந்தான். நானும் மெல்லாம என்னடா ரொம்ப சந்தோஷமா இருக்க? அப்புடின்னு கேட்டேன். அதுக்கு அவன் மச்சி நான் என்னோட ஆளுகிட்ட நான் அவல காதலிக்றதா  சொல்லிட்டேன்டா!!!. இவ்வளோ நேரம் வாங்குன திட்டு எல்லாத்தையும் மறந்துட்டு சந்தோஷமா அவன்கிட்ட என்னடா சொன்ன அதுக்குன்னு கேட்டேன். அதுக்கு குமார் சொன்னான் போன் நம்பர் குடு காலைல போன் பண்ணி சொல்றேன்னு சொல்லிடாட அப்புடின்னு சொன்னான். நானும் போன் நம்பர் குடுத்திய அப்புடின்னு கேட்டேன். அதுக்கு அவன் என்ன சொன்னானு தெரியுமா சார்? மச்சி என்னோட போன் ரிபேர்  பண்ண கடைல குடுத்திருகேண்டா அதான் உன்னோட நம்பர் குடுத்துட்டு வந்தேன் மச்சி. போன் எதாவது வந்துச்சான்னு கேட்டான்..........
அப்புறம் என்ன ரெண்டுபேரும் உடனே வீட்ல இருந்து ஓடிட்டோம், ரெண்டுநாளைக்கு தலை மறைவா வாழ வேண்டியதா போச்சு....

Tuesday, March 8, 2011

A Walk To Remember (ஆங்கில காதல் கதை)

காதலை விரும்பும் அனைவரும் அவசியம் பார்க்கவேண்டிய படம். முடிவு சோகமானது என்றாலும் அழகான காதலை - ஆடம் சங்கமன் (adam Shankman) படமாகி இருக்கிறார். இந்த படம் 36 நாட்களில் படமாக்கப்பட்டது. கதையின் நாயகி Mandy Moore 10 நாட்கள் மட்டுமே நடித்துள்ளார்.இந்த படம் உங்கள் கண்களில் நீர் வழிய வைத்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.

உயர்நிலைப் பள்ளி ஒன்றில் மாணவர்கள் செய்த விளையாட்டு விபரீதமாகி விட, இதற்கு காரணமான அப்பள்ளியின் பிரபலமான முரட்டு மாணவன் லாண்டன் ரோலின்ஸ் கார்டர் (ஷேன் வெஸ்ட்) மாட்டிக் கொள்கிறான். அவனுக்கு தண்டனையாக, பள்ளி முடிந்ததும் வசதியற்ற குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும், பள்ளி சார்பாக நடக்கவிருக்கும் இசை நாடகத்தில் நடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்படுகிறது.  அந்த இசை நாடகத்தில் நடிக்கும் தேவாலய பாதிரியாரின் மகளான ஜேமீ, லாண்டனுக்கு பல ஆண்டுகள் பரிச்சயமானவள். ஆனால் இருவரும் பழகியதோ,பேசிக் கொண்டதோ கிடையாது. இருவரும் சந்தித்துக் கொண்டாலும், வெவ்வேறு சமூக அந்தஸ்தில் இருப்பதால் பழகும் வாய்ப்பே இல்லாமல் போனது. 

இசை நாடகத்தில் நடிப்பது கடினமான காரியம் என்பதால், எப்போதும் அமைதியாக காட்சியளிக்கும் ஜெமீ எலிசபத் சுல்லீவன் (மாண்டி மூர்) உதவியை நாட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறான்.உதவ ஒப்புக்கொள்ளும் ஜேமீ, தன்னைக் காதலிக்கக் கூடாது என்று அவனிடம் உறுதிமொழி கேட்கிறாள். இதைக்கேட்டு சிரிக்கும் லாண்டன், ஜேமீயிடம் எப்போதும் தான் காதல் கொள்ளப்போவதில்லை என்று உறுதியாக நம்புகிறான். அந்த நகரத்தில் பிரபலமாக இருக்கும் நவநாகரீக அழகுப் பெண்களுடன் பழகுவதால், பழைய நாகரிக உடைகளை அணியும் ஜேமீ, தன் காதலியாக முடியாது என்ற எண்ணம் அவன் மனதில் மேலோங்கியிருக்கிறது.

லாண்டனும், ஜேமீயும் பள்ளி முடிந்ததும் அவளது வீட்டில் ஒத்திகை செய்கின்றனர்.அப்போது இருவரும் நட்பை வளர்த்துக் கொள்கின்றனர். ஜேமீக்கு உடலில் ஓவியம் வரைந்து கொள்வது, ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் தோன்றுவது உள்பட பல ஆசைகளைத் தன் வாழ்நாளில் சாத்தியமாக்க வேண்டும் என்ற விருப்பம் இருப்பதை லாண்டன் அறிந்து கொள்கிறான்.

நாடகம் அரங்கேறுகிறது. ஒரு காட்சியில் ஜேமீ தனது அழகாலும், வசீகரக் குரலாலும் தன்னுடன் நடிக்கும் லாண்டன் உள்பட அரங்கத்தின் அனைவரையும் வசீகரிக்கிறாள். அவளது திறமை மற்றும் அழகில் மயங்கும் லாண்டன், நாடகத்தின் இறுதிக் காட்சியில் யாரும் எதிர்பாராத விதமாக அவளை முத்தமிடுகிறான். இப்படி ஒரு காட்சி நாடகத்தின் கதையமைப்பில் இல்லாததால் சலசலப்பு எழுகிறது.
இருவரும் காதல் வசப்படுகிறார்கள் ஒருநாள் மாலைப் பொழுதில், தனக்கு கொடிய புற்றுநோய் இருப்பதாக, லாண்டனிடம் கூறுகிறாள் ஜேமீ. சிகிச்சையை நிறுத்தி விட்டதாகவும் அவனிடம் தெரிவிக்கிறாள். லாண்டன் முதல் முறையாக உடைந்து போகிறான். தன் வாழ்நாளில் எஞ்சியுள்ள நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதால், இந்த உண்மையைக் கூறாமல் லாண்டனை வெறுத்ததாகவும், ஆனால் இதயத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் காதலில் விழுந்து விட்டதாகவும் அவனிடம் கூறுகிறாள்.


உடனே லாண்டன் இதய நோய் சிகிச்சை நிபுணரான தனது தந்தையிடம் சென்று, ஜேமீக்கு உதவுமாறு வேண்டுகிறான். புற்றுநோய் சிகிச்சையில் அவர் நிபுணர் இல்லை என்பதால் முதலில் தயங்கிய அவர், பிறகு ஜேமீயை பரிசோதித்து விட்டு அவளது மருத்துவ தகவல்களை முழுதாக ஆய்வு செய்த பிறகு தான், நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஆர்வமில்லாமல் கூறிவிடுகிறார். லாண்டன் கடுப்புடன் அங்கிருந்து வெளியேறுகிறான்.

ஜேமீயை இனி காப்பாற்ற முடியாது என்ன உணர்துகொள்ளும் லாண்டன் அவளது ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றுகிறான் இருவரும் காதலின் ஆழத்தையும், தூய்மையான அன்பையும் உணர்கின்றனர். ஜேமீயின் மரணத்துடன் படம் நிறைவடைகிறது. ஆனால் நோய்வாய்ப்பட்ட தனது தாயின் வாழ்வு முடிந்த அதே தேவாலயத்தில், லாண்டனைத் திருமணம் செய்து கொண்ட பிறகு தான் ஜேமீ இறக்கிறாள். இந்த நிகழ்வே அவளது ஆசைகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. ஜேமியின் நினைவுகளைச் சுமந்து கொண்டு, அவளின் ஆசைப்படி வாழ்வில் தனது குறிக்கோளை எட்டி நல்ல நிலையை அடைகிறான் லாண்டன்.நான்கு ஆண்டுகள் கழித்து, ஜேமீயின் தந்தையைச் சந்திக்கிறான் லாண்டன். ஜேமீயின் ஆசைப்படி கல்லூரிப் படிப்பை முடித்து, மருத்துவக் கல்லூரியில் சேர்கிறான். அவளைச் சந்திப்பதற்கு முன், பள்ளிப் படிப்பைத் தாண்டுவோமா என்பதிலேயே உறுதியில்லாமல் சுற்றித் திரிந்த அவன், இப்போதைய நிலையை அடைவதற்கு முழுக் காரணம் ஜேமீ தான் என்பதை நினைவு கூறுகிறான். அவள் தந்தையிடம் பேசும் போது, இறப்பதற்குள் ஏதாவது ஒரு "அதிசயத்தை" நிகழ்த்த வேண்டும் என்ற ஜேமீயின் ஆசைகளுள் ஒன்றை, அவளால் நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை என்று வருந்துகிறான். இதற்கு சன்னமான குரலில் பதிலளிக்கும் ஜேமீயின் தந்தை, "அவள் அதிசயத்தை நிகழ்த்தி விட்டாள். அந்த அதிசயம் நீ தான்." என்கிறார்.
படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்!!!Sunday, February 27, 2011

inception vs matrix (ஒரு கண்ணோட்டம்)ஒரு ஒரு பதிவா எழுதி என்னோட வண்டி ஓடிகிட்டு இருந்திச்சி நம்ம நண்பர் பிரபாகரன் ஒரே பதிவுல 50 படங்களுக்கான லிங்க கொடுத்து என்ன கதிகலங்க வச்சிட்டாரு. இனி அவர் பதிவுல இல்லாத படங்கள பார்த்து அதுக்கு அப்புறமா தான் நான் எழுத முடியும்.. பிரபாகரன் குறிப்பிட்ட படங்கள் வரிசையை பார்த்தேன். அதில் இரண்டாவதாக இடம்பெற்றிருந்த இன்செப்சியன் (Inception) படம் என் கண்ணை உறுத்தியது இதில் உங்களது கருத்துகளையும் நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

இன்செப்சியன் (Inception) படத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் மட்ரிக்ஸ் படத்தை நினைவில் வைத்தே இந்த படத்தின் கதையை உருவாகியிருக்கவேண்டும். இரண்டுமே  ஒரே வகையான கதை. மாட்ரிக்ஸில் கணினியும் இன்செப்சனில் கனவையும் மையமாக கொண்டு கதை அமைக்கபட்டிருகும்.

நான் இன்செப்சியன் படம் பார்த்தவுடன் நினைத்தது- ' ஏன் இந்த படம் இவ்வளவு பிரபலம் ஆனது? மாட்ரிக்ஸ் அளவிற்கு கூட இதில் கதை இல்லையே'. இன்செப்சனை பற்றி அநேகமாக விமர்சனம் எழுதும் அணைத்து நண்பர்களும் எழுதி இருப்பார்கள் ஆகையால் நான் மாற்றிக்ஸை பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன்.

மாட்ரிக்ஸ் படம் அனைவர்க்கும் பிடித்த ஒரு படம் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஆனால் படம் பிடித்ததற்கு காரணம் கேட்டால் அதில் முதல் இடம் பிடிப்பது படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளும் காட்சி அமைப்பும் மட்டுமே. உண்மையில் படத்தை ஒரு முறை பார்த்தவர்களுக்கு கதை முழுவதும் புரிய வாய்ப்பே இல்லை. ஆனால் படத்தில் இன்செப்சனைவிட அருமையான கதை உள்ளது.

மாற்றிக்ஸின் கதைப்படி நாம் வாழும் இந்த உலகம் உண்மையானது அல்ல, நாம் உண்மையில் வாழும் வருடம் 2199. நாம் அனைவரும் இயந்திரங்களால் சிறைபிடிகபட்டிருகிறோம். இயந்திரங்கள் இயங்குவதற்காக நமது மூலையில் இருந்து உருவாகும் மின் அலைகளை ஒரு பாட்டரிபோல்(Battery) பயன்படுத்துகிறது. அதற்காக நாம் அனைவரையும் மயக்கநிலையில் ஒரு பெட்டிக்குள் அடைத்து நாம் மயக்கம் தெளிந்து எழுந்துவிட கூடாது என்பதற்காக மாட்ரிக்ஸ் என்ற மென்பொருளை பயன்படுத்தி நாம் அனைவரும் இந்த மாய உலகத்தில் வாழ்வதுபோல பிரமை ஏற்படுத்தி உள்ளது. இந்த உண்மை தெரிந்து அந்த பெட்டிக்குள் இருந்து வெளிவந்த சிலர், மாற்றிக்ஸின் இயக்கத்தை நிறுத்தி அனைவரையும் சுயநினைவிற்கு கொண்டுவர முயற்சிப்பதே மாட்ரிக்ஸ் கதை. இதற்காக அந்த குழு மாற்றிக்ஸை ஹக் (Hack) செய்து அதனுள் நுழைந்து நிகழ்த்தும் சண்டை காட்சிகள் தான் கிராபிக்ஸ் உதவியுடன் பார்வைக்கு விருந்து படைத்தன. இந்த உலகத்தில் நாம் காணும் பேய் போன்ற உருவங்கள், மற்றும் பல விளக்கமுடியாத சம்பவங்களுக்கு மாட்ரிக்ஸ் மென்பொருளின் குறைபாடே காரணம் என்று விளக்கம் தரபட்டிருக்கும்.

இந்த கதையை உண்மை என்று ஏற்றுக்கொள்ளவும் முடியாது அதே சமயம் பொய் என்று நிரூபிக்கவும் முடியாது. இப்படி ஒரு அருமையான சிந்தனை இயக்குனர் மனதில் எவ்வாறு உதித்தது என்பதே வியப்பான விஷயம். இதே போலத்தான் இன்செப்சனில் கனவில் நடப்பதை காட்டபட்டிருக்கும். என்னை பொறுத்தவரை இன்செப்சனை விட மாட்ரிக்ஸ் சிறந்த படம். உங்கள் கருத்துகளை கமெண்டாக சொல்லலாம்.

தகவல்:-
          
   படத்தின் இயக்குனர்கள் அண்டி வாசொவ்ச்கி (Andy wachowski) மற்றும் லார்ரி வாசொவ்ச்கி (Larry wachowski ) இருவரும் சகோதரர்கள் மாட்ரிக்ஸ் படத்தின் இரண்டாவது பாகம் முடிந்த பிறகு லானா வாசொவ்ச்கி முழுவதுமாக தன்னை பெண்ணைக மாற்றிக்கொண்டு அண்டி வாசொவ்ச்கியை திருமணம் செய்துகொண்டு தன் பெயரை லானா வாசொவ்ச்கியாக (Lana வாசொவ்ச்கி) மாற்றிக்கொண்டார்..

Tuesday, February 15, 2011

The Man From Earth 2007 (ஆங்கில திரைப்படம் )பொதுவா டிவில போடுற சீரியல எடுத்துக்கலாம். அதிகபட்சமா 20 நிமஷம் ஓடுற சீரியல்ல குறைஞ்சபட்சம் மூணு வேற வேற இடத்துல எடுத்த காட்சிகள் இருக்கும். கதைல எந்த முன்னேற்றமும் இல்லைனாலும், பாக்குற மக்களுக்கு சலிப்பு வரக்கூடாதுன்னு அப்படி எடுப்பாங்க. ஆனா இந்த படத்த பொருத்தவர, ஒன்றரை மணிநேரம் ஓடும் படம் முழுவதும், ஒரே வீட்டில் எட்டு பேர் பேசுறத மட்டும் படமா கொடுத்துருக்காரு, இயக்குனர் ரிசேர்ட் சென்க்மேன் (Richard Schenkmen ). ஆனால் கண்டிப்பா படம் முடியும் வரை எழுந்து போக மனசு வராது, அது மட்டும் நிச்சயம். கிறிஸ்துவர்களுக்கு இந்த படத்தை பார்த்தால் கோபம் வரலாம்.

ப்ரோபசர் ஜான் ஒல்ட்மன் (John Oldman) தன்னுடைய பொருட்கள் எல்லாத்தையும் டிரக் ஒன்றில் ஏத்திக்கொண்டு இருப்பதோடு படம் துவங்குகிறது. ஊரைவிட்டு செல்ல முடிவுசெய்த ஜானை வழியானுபிவைக்க வருகின்றனர், நண்பர்கள் மற்றும் உடன் வேலைசெய்பவர்கள்.
ஹாரி (harry-Biologist),
எடித் (Edith) ஜானுடன் வேலைசெய்யும் வயதான பெண். கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவர்,
டேன் (Dan) மனிதவியல் நிபுணர்,
சென்டி (Sandy) ஜான் மீது காதல் கொண்டிருக்கும் பெண்,
டாக்டர் வில் க்ருபர் (Dr.Will Gruber) மனோதத்துவ நிபுணர் ,
ஆர்ட் (Art-archaeologist)
லிண்டா (Linda) ஜானின் மாணவி,

இவர்கள் அனைவரும் ஜான் ஊரைவிட்டு செல்லும் காரணத்தை கேட்க, ஜான் சில நம்பமுடியாத கதைகளைக் கூறுகிறார். தான் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பிறந்த குகை மனிதன் என்றும், 14000 ஆண்டுகளாக உயிருடன் இருப்பதாகவும் கூறுகிறார். ஜானின் கதையை அனைவரும் நம்ப மறுக்க, தன் வரலாற்றை கூறுகிறார்.

சுமேரியன்னாக 2000 வருடமும், பாபிலோளியனாக பலவருடங்களும், வாழ்ந்ததை கூறும் ஜான், தான் புத்தரின் சீடனாக இருந்ததாகவும் கூறுகிறார். மேலும் கொலம்பசுடன் வேலை செய்ததாகவும் பல சரித்திர பெயர்களை குறிப்பிடுகிறார்.

அனைவரும் பலவிதங்களில் கேள்விகள் கேட்க அனைத்திற்கும் சரியாக பதில் அளிக்கிறார் ஜான். இருந்தாலும் அதை யாரும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.

சிறுதுநேரத்தில், பேச்சு, மதத்தின் பக்கம் திசைமாற, தான் எந்த மதத்தை சார்ந்தவனும் அல்ல, கடவுள் தேவையற்றது என்று கூறுகிறார். திடீரென தற்போது கடவுளாக வணங்கப்படும் இயேசு (Jesus) தான்தான் எனவும் அவர் கூறுகிறார். இதை கேட்டதும் கடும் கோபம்கொண்டு கதரியழுகிறார் எடித். ஜானுக்கு மனநிலை சரியல்ல என்றும், கடும் போதைக்கு அடிமையாகியுள்ளார் எனவும் முடிவு செய்கின்றனர்.

இந்த விவாதத்திற்கு பிறகு அங்கு அனைவருக்கும் கோபம் அதிகமாக, க்ருபர் துப்பாலக்கி முனையில், தான் கூறியது பொய் என ஒப்புகொள்ளுமாறு மிரட்டுகிறார். சிறிய கலவரத்திற்குபிறகு, தான் கூறியது அனைத்தும் பொய் எனவும், அவர்களை ஏமாற்ற எண்ணியே அவ்வாறு கூறியதாக ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்கிறார். கோபத்துடனும் சிறு புன்னகையுடனும் அனைவரும் அங்கிருந்து செல்கின்றனர் ஜானின் காதலியை தவிர.

தான் மிரட்டியதற்கு மன்னிப்பு கேட்பதற்காக திரும்பி வரும் க்ருபர், ஜான் லின்டாவிடம் பேசுவதை கேட்கிறார். அறுபது வருடங்களுக்கு முன்பு ஜான் தாமஸ் என்ற பெயரில் பாஸ்டனில் கெமிஸ்டரி ப்ரோபசராக ஜான் பணிபுரிந்துள்ளார். ஜான் தாமஸ் வேறு யாரும் அல்ல, க்ருபெரின் தந்தை. இதை கேட்டதும் க்ருபர் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே விழுந்து இறக்கிறார்.   க்ருபரின் உடலை ஆம்புலன்சில் ஏற்றிவிட்டு ஜான் ஊரைவிட்டு செல்கிறார்.

Thursday, February 10, 2011

தி ஓல்ட் பாய் (கொரிய த்ரில்லர் திரைப்படம் 18+ )
2003 ஆம் ஆண்டில் வெளியான “தி ஓல்ட் பாய்” - ஒரு த்ரில்லர் திரைப்படம்.
13 விருதுகளை (ஆஸ்கார் அல்ல )வாங்கி குவித்துள்ள இந்த படத்தின் இயக்குனர் சென் - வூக் –பார்க். 


படத்தின் கதாநாயகன் டே சுஹோ (dae-su ho) தன் மகளின் பிறந்த நாள் அன்று குடித்துவிட்டு தெருவில் தகராறு செய்ததற்காக கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் அமர்ந்திருப்பதில் இருந்து படம் துவங்குகிறது. 


அங்குவரும் சுஹோவின் நண்பன் அவரை ஜாமீனில் எடுத்து வீட்டிற்கு அழைத்து செல்கிறார். செல்லும் வழியில் வீட்டிற்கு போன் செய்து பேசிக்கொண்டிருக்கும்போது சுஹோ
மாயமாகிறார். சுஹோவை கடத்திச்சென்றவர்கள் ஹோட்டல் அறைபோன்ற ஒரு இடத்தில் அடைத்து வைக்கின்றனர்.
எத்தனை நாள் தெரியுமா?  சுமாராக 5500 நாட்கள் அதாவது
15 வருடங்கள். 


தான் எதற்காக கடத்தப்பட்டோம்? எங்கு அடைக்கபட்டிருகிறோம்? எப்போது விடுவிக்கபடுவோம்? என்று தெரியாமல், பழிவாங்கும் ஒரே வெறியுடன் உடற்பயிற்சி செய்து, 15 வருடம் டிவியை மட்டுமே நண்பனாகக் கொண்டு, தப்பிக்கும் முயற்சியையும் கைவிடாமல் வாழ்கிறார், சுஹோ.


திடீரென ஒருநாள் ஒரு கட்டிடத்தின் மாடியில் அவர் விடுவிக்கபடுகிறார். அப்போது தன் மனைவி இறந்துவிட்டதையும், மகள் வெளிநாடு சென்றுவிட்டதையும் அறிந்துகொள்ளும் சுஹோ,


தன்னை இந்த நிலைக்கு கொண்டுவந்த மனிதனை, தேடி கண்டுபிடிப்பதே தனது குறிக்கோளாகக் கொண்டு திரிகிறார். 


ஒருநாள் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட செல்லும் சுஹோ, அங்கு மயங்கிவிழுகிறார். அங்கு பணிபுரியும் இளம் பெண்ணான மீதோ(mi-do) தன்னுடைய வீட்டிற்கு அவரை அழைத்து
சென்று பார்த்துக்கொள்கிறாள். 


15 வருடம் பெண்களையே பார்க்காத சுஹோ, மிதோவை கண்டதும்
பாய்கிறார். பின்னர் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு, பழிவாங்கும் வேலையே தொடர்கிறார். இந்த வேலையில் மிதோவும் உதவி செய்ய, தன்னை அடைத்துவைத்த இடத்தையும், அங்கு தனக்கு உணவு அளித்த நபரையும் கண்டுபிடிக்கிறான். சிக்கியவனை பல்வேறு சித்ரவதை செய்து தன்னை இப்படி செய்யச் சொன்னது யார் என கேட்கிறான். 


சிக்கியவன் தனக்கு எதுவும் தெரியாது எனவும் போனில் மட்டுமே தான் பேசியதாகவும் கூறி, தொலைபேசி உரையாடல் அடங்கிய டேபை (Tape) தருகிறான். பிறகு அங்குள்ள அடியாட்களுடன் சண்டைபோட்டு தெருவில் மயங்கிவிழும் சுஹோவை, டாக்ஸி
ஒன்றில் ஏற்றி சரியாக மீதோ விலாசம் கொடுத்து அனுப்புகிறான் ஒருவன்.


இதற்கிடையில் மீடோவுடன் அதிக நெருக்கம் ஏற்பட்டு அவளுடன் உறவுகொள்கிறான் சுஹோ. மீடோவின் வீட்டின் அருகிலேயே தன்னை அடைத்துவைத்திருந்ததை வூஜின் (woo-jin ) கண்டுபிடிக்கிறான். 


தான் அடைத்து வைக்கப்பட்டதன் காரணத்தை ஜூலை 5 ஆம்
தேதிக்குள் சுஹோவே கண்டுபிடிக்கவேண்டும், இல்லை என்றால் மீதோ கொள்ளபடுவாள் என்றும் எச்சரிக்கிறான் வூஜின் .


தன்னுடைய ப்ரொவ்சிங் சென்டர் வைத்திருக்கும் நண்பனின்
உதவியுடன் வூஜின் தன்னுடன் பள்ளியில் வேறு வகுப்பில் படித்தவன் என்று கண்டுபிடிக்கிறான் சுஹோ. பள்ளி  இறுதி  நாளன்று லேபில் வூஜின் தன்னுடைய தங்கையுடன்(soo-ah) உறவில் இருப்பதை பார்த்துவிடும் சுஹோ அதை தன் நண்பனிடம்
கூறுகிறான். 


அது புரளியாக மாறி சகோதரனுடன் உறவில் ஈடுபட்டு ஸோஅஹ் கர்ப்பமாக இருப்பதாக பள்ளி முழுவதும் பரவுகிறது. மனதில் பெரும் குழப்பம் ஏற்படும் ஸோஅஹ்விற்கு உண்மையில் தான் கர்ப்பமாக இருபதைப்போல் தோன்ற தற்கொலை செய்துகொள்கிறாள்.


தான் ஆரம்பித்து வைத்த சிறிய புரளிக்காக 15 வருடம் சிறைபிடிக்கபட்டதை கண்டறியும் சுஹோ நேராக வூஜின் வீட்டிற்கு செல்கிறான். அங்கு சுஹோவிற்கு போட்டோ ஆல்பம் ஒன்று தரப்படுகிறது. அது தன் மகள் சிறுவயது படத்திலிருந்து ஆரம்பிக்கிறது.


சில பக்கங்களை புரட்டியதுமே மீதோ தன்னுடைய மகள் என்று தெரிந்துகொள்கிறான். தன்னுடைய சொந்த மகளிடமே உறவு வைத்துக்கொண்டதை நினைத்து கதறி அழும் சுஹோ, இந்த
உண்மை மீடோவிற்கு தெரிய வேண்டாம் என்று வூஜின் காலில் விழுந்து கதறுகிறான்.


தான் ஆரம்பித்த புரளிக்கான தண்டனையாய் தன் நாக்கை அறுத்துக்கொள்கிறார் சுஹோ. சுஹோவை விட்டு லிப்டில் கீழ் இறங்கும் வூஜின் கண் முன்னே தங்கை இறந்தது நினைவில் கொண்டு வர தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொள்கிறான். பிறகு ஹிப்னாடிசம் உதவியுடன் நடந்ததை சுஹோ மாறாக முயல்வதோடு படம் முடிகிறது.


வழக்கமாக படத்தின் முடிவை நான் சொன்னது இல்லை. இந்த படத்தை பொறுத்தவரை முடிவை சொல்லவில்லை என்றால், இதை பற்றி எழுத முடியாது, ஆகையால்தான் முழு கதையும்
எழுதியுள்ளேன்.


படத்தில் எனக்கு பிடித்தவை :-
                இந்த படத்தின் படத்தொகுப்பு மிகவும் அருமை. காட்சிகளை எடுத்த விதமும் அருமை. சுமார் மூன்று நிமிடம் கட் செய்யாமல் தொடரும் 15 பேருடன் சண்டைபோடும் காட்சி மிகவும் அருமையாக படமாக்கபட்டுள்ளது.


தல அஞ்சா சிங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க படத்தை பதிவிறக்கும் தளத்தை தரலாம் என முடிவு செய்துள்ளேன் இதோ அந்த முகவரிகள்:
                                                                             TORRENT
                                                                          RAPIDSHARE

Tuesday, February 8, 2011

தி கேம் (1997) திரில்லர்விபரிதமான விளையாட்டில் சிக்கிகொள்ளும் சான் பிரான்சிஸ்கோவில் பெரும் பணகாரறான நிகோலஸ் படும் பாடு தான் படம் ....

 நிகோலஸ் சான் பிரான்சிஸ்கோவில் வெற்றிகரமான் இன்வெஸ்ட்மென்ட் பான்கர் (investment banker) தொழிலில் ஜெயித்தாலும் வாழ்வில் தோற்ற மனிதன். மனைவி எலிசபெத்'ஐ விவாகரத்து செய்து விட்டு அரண்மனை போல இருக்கும் வீட்டில் தனியாக வாழ்பவர். நிகோலசின் சகோதரன் கோண்ட்ரெட் எல்லா கேட்ட பழக்கவழக்கத்திற்கும் அடிமையாகி பல நாடுகளுக்கு சென்றுகொண்டிருக்கும் சராசரி இளைஞன். 

நிகோலஸ் பிறந்தநாளில் அதனை நாள் எங்கிருந்தான் என்று தெரியாத சகோதரன் கோண்ட்ரெட் திடீர்னு வந்து பிறந்தநாள் பரிசா CRS என்ற நிறுவனம் நடத்துற ஒரு விளையாட்டில் நுழையிற அனுமதி சீட்டை குடுக்கிறான். விருப்பம் இல்லாம அத வாங்கிக்கிற நிகோலஸ் தன்னோட நண்பர்கள் கிட்ட விசாரிச்சு அது நல்ல விளையாட்டு என்று உறுதி செஞ்ச பிறகு அதில் சேர்கிறார். பலமணிநேரம் உடல் மற்றும் மனநிலை சோதனைக்கு பிறகு வீட்டுக்கு வரும் நிகோலாஸ் விரைவில் விளையாட்டு ஆரம்பித்துவிட்டதை உணர்கிறார். தன்னுடைய தொழில்,பணம்,பாதுகாப்பு அணைத்து ஆபத்தில் இருப்பதை தெரிந்துகொள்கிறார்

திடிரென்று தோன்றி இந்த விளையாட்டில் உன்ன ஈடுபடுதனதுகு மன்னிப்பு கேக்கும்  கோண்ட்ரெட் தாணு இந்த விளையாட்டால் பெரும் பிரச்சனையில் உள்ளதாக கூறிமறைகிறார். போலிசின் உதவியுடன் CRS நிறுவனத்திற்கு செல்லும் நிகோலஸ் அங்கு அலுவலகம் இருந்ததற்கான தடயம் கூட இல்லாததை கண்டு அதிர்கிறார் விடாது துரத்தும் பிரச்சனைகளுக்குநடுவில் கிறிஸ்டியன் என்ற பெண்ணை சந்திக்கிறார்.
அந்த பெண்ணும் இந்த விளையாட்டில் சிக்கிகொண்டிருப்பதை தெரிந்து கொண்டு ஆவளுடன் சேர்த்து இதில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார்.
இந்த நிலையில் நிகலோசின் வாங்கி கணக்கில்  உள்ள பணம் அனைத்தும்  CRS நிறுவனத்தால் திருடபடுகிறது. உதவிக்காக கிறிஸ்டினா வீட்டிற்கு செல்லும் நிகோலஸ் அவளும் CRS நிறுவனத்தின் தொழிலாளி என்று அவள் கொடுத்த மயக்க மருந்துக்குபின் தெரிந்துகொள்கிறார். 

மயங்கி விழும் நிகோலஸ் எழுந்து பார்க்கும்  பொழுது மெக்சிகோவின் புறநகர் பகுதியில்உள்ள சுடுகாட்டில் இருக்கிறார். பிச்சகரனைபோல அங்கிருந்து தடுமாறி தான் வீட்டிற்கு வரும் அவர் வீடு வாசலில் வீடு ஏலத்திற்கு விடும் நீதிமன்ற உத்தரவை காண்கிறார். வெறியுடன் வீட்டிற்கும் தாவிகுதித்து தான் மறைத்து வைத்திருந்த கைதுப்பாக்கியை எடுத்து பழிவாங்க கிளம்புகிறார். அதே கட்டிடத்தின் வேறு தலத்தில் CRS அலுவலகம் இயங்குவதை கண்டுபிடித்து அங்கு செல்கிறார். அங்கு தென்பட்ட கிரிஸ்டினாவை துப்பாகிமுனையில் தனி அறைக்கு இழுத்து செல்கிறார். இது எல்லாம் கோண்ட்ரெட் ஏற்பாடு செய்த விளையாட்டு என்று அவ்ளவு சொல்லியும் கேக்காமல் கதவை உடைத்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளுடன் வரும் கோண்ட்ரெட்'ஐ துப்பாகியால் சுட்டுவிடுகிறார். சாம்பின் பாட்டில்உடன் வந்த சகோதரன் அந்த இடத்திலேயே இறக்கிறார். மனமுடைந்து கட்டிடத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்கிறார் நிகோலஸ். இத்துடன் கதை முடிந்து விட்டதா என்றல் இல்லை. இதற்கு பின் உள்ள திருப்பம் ரசிக்க கூடியது என்பத நீங்கள் அதை பார்த்து தெரிந்துகொள்வது சுவாரசியமானது. 

இரண்டு மணிநேரம் செல்லும் இந்த படத்தில் நிகோலசாக மைகேல்  டௌக்லஸ் நடித்துள்ளார் கோண்ட்ரெட்ஆகா சென்ற ஆண்டு மில்க் திரைபடத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது பெற்ற சியன் பெண்ண நடித்துள்ளார் .

Sunday, February 6, 2011

நிலவில் கால்வைத்தது உண்மையா?
1969 ஆம் ஆண்டு அர்ம்ஸ்ட்ராங் முதலின் நிலவில் கால் வைத்தது உண்மையா? என்னும் பரபரப்பான கேள்வி பதில் கிடைக்காமல் உலவிகொண்டிருபது பலருக்கு தெரியும் . அதை பற்றி சிறிது பார்க்கலாம் என்று இத பதிவை எளுதுகிற்றேன்.1) முதலாவதாக உலகம் முலுவதும் நேரடி ஒலிபரப்பு அளிக்கும் வசதி அப்போது இல்லை. இருபினும் பூமியில் இருந்து அல்ல நிலவில் இருந்து நேரடி ஒலிபரப்பு செய்தது அமெரிக்கா . அவர்கள் நேரடி ஒலிபரப்பு செய்ய உதவியதாக சொல்லபடுவது (Lunar Module's antenna ) அது தற்போது நாம் வீடுகளில் பயன் படுத்தும் டிஷ் அன்டன்ன போல இருக்கும், அத கொண்டு உலகம் முழுவதும் ஒளிபரப்பியது சாதனையா? அல்லது சந்தேகத்தை தூண்டுவதா? அந்த காலகட்டத்தில் ரஷ்யாவிற்கு சொந்தமான ஒரே ஒரு செயற்கைக்கோள் மட்டுமே உலகை சுற்றி கொண்டிருந்தது. நேரடி ஒலிபரப்பு செய்யவேண்டும் என்றல் அதன் உதவி அவசியம், அனால் அவர்கள் ரஷ்யாவிடம் உதவி கேற்கவில்லை. அவர்கள் நேரடி ஒளிபரப்பை செய்ய முக்கிய காரணம் அப்போது ரஷ்சியவிற்கும் அமெரிக்கவிற்கும் நடந்த தொழில்நுற்ப போட்டியே கரணம். அணைத்து வகையிலும் ரஷ்ய அமெரிக்கவைவிட ஒரு படி முன்னிலையில் இருந்தது எனபது தெரிந்ததே. இந்த போட்டியில்  தோற்றுவிடக்கூடாது என்பதற்காகவே அவசர அவசரமாக இந்த நிலவில் தரை இறங்கும் நாடகம் அரங்கேறி இருக்கிறது.

2 ) ரஷ்ய இரண்டாவது ஆதாரமாக சொல்வது வானம். தரை இறங்கும் வீடியோவில் நச்சத்திரம் என்று ஒன்று தெரியவே இல்லை. வானம் முழுவதும் நச்சத்திரம் நிரம்பி இருக்க வேண்டிய நேரத்தில் ஒன்று கூட தெரியாதது ஏன் ?

3 ) மூன்றாவதாக  காற்று அதிகம் வீசத நிலவில் அமெரிக்க கோடியை நாட்டுவதில் காற்றின் இடஞ்சளால் அர்ம்சற்றாங் கஷ்டபடுவது.

4 ) மேலே காட்டபட்டுள்ள படத்தைப்போல சூரியனில் இருந்து மட்டுமே வெளிச்சம் கிடைக்கும் அந்த இடத்தில் பல கோணங்களில் நிழல் விழுவது முரண்பாடான விஷயம்.


 
5 ) இந்த படத்தில் தென்படும் கல்லில் திரைப்படங்களில் செட் ப்ராபர்டியாக பயன் படுத்தும் பொருள்களில் எழுதப்படும் (C) என்ற எழுத்து  தென்படுகிறது.


6 ) நிலவில் தரை இறங்கிய ரோவரின் நிழல் விண்வெளி வீரர் மீது முழுமையாக விழுந்தாலும் அவரை தெளிவாக படம் பிடிக்க முடிந்தது எப்படி?

எல்லாவற்றிற்கும் மேல் கென்னடி தனது விஞ்யானிகள் குழுவிற்கு சொன்னதாக கூறப்பட்டு வாக்கியம் (if you cant make it, fake it)  

Thursday, February 3, 2011

டெத் நோட் (2006) ஜப்பான் திரைப்படம்இயக்குனர் - ஷுசுகே கண்கோ

ஜப்பானிய நம்பிகையின் படி நம் இறப்பை தீர்மானிப்பது ஷிநிகாமி எனப்படும் ஒரு வகை குட்டிச்சதங்கள் தான். அது தன் கையில் வைத்திருக்க வேண்டிய டெத் நோட் எனப்படும் புத்தகத்தில் ஆயுள் முடிந்தவரின் பெயரை எழுதி அவர் எப்படி இரக வேண்டும் என்று குறிப்பிட்டால் அது உடனே நடக்கும்.

இந்த படத்தில் அதில் ஒரு புத்தகம் தவறி பூமியில் விழுகிறது அது யகாமி லைட் என பெயர் கொண்ட ஒரு பள்ளி மாணவனிடம் கிடைகின்றது முதலில் விளையாட்டாக நினைத்தாலும் பிறகு அதன் தன்மையை புரிந்துகொள்கிறான்.இந்த புத்தகத்திற்குஎன ஏகப்பட்ட விதிகள் உள்ளன எழுது பெயர் அவர்களது உண்மையான பெயராக இருக்கவேண்டும், எழுதும் பொது அவர்களின் முகத்தை மனதில் நினைக்க வேண்டும், பெயர் எழுதிய 40 வினாடிக்குள் அவர் எப்படி இரக வேண்டும் என்பதை எழுத வேண்டும் இல்லையேல் பெயர் எழுத பட்டவர் மாரடைப்பில் இறந்துவிடுவார் , எல்லாவற்றிற்கும் மேல் இந்த புத்தகம் யாரிடம் கிடைக்கிறதோ அவர்கள் இறக்கும் வரை அந்த புத்தகத்திற்கு சொந்தமான ஷிநிகாமி கூடவே இருக்கும்.


இந்த புத்தகம் கிடைத்த மாணவன்  யகாமி உலகில் உள்ள கெட்டவர்கள் அனைவரையும் கொன்றுவிட வேண்டு என்று முடிவு எடுக்கிறான். தன் அப்பா போலீஸ் அதிகாரி என்பதால் குற்றவாளிகள் பெயர் கிடைப்பதில் அவனுக்கு பிரைச்சனை இல்லை. ஒரே நாளில் சிறையில் இருக்கும் பல நூறு கைதிகள் மாரடைப்பில் இறந்து போகின்றனர். இதில் அனேகம்பேர் ஜப்பானில் இறகின்றனர். தன் பெயரை கீரா என வெளிபடுத்துகிறான்.  இந்த இறப்பை பற்றி துப்பறிய வரும் யல் (L) மிகவும் புத்திசாலி. சில மணி நேரத்திலேயே எந்த ஊரை சேர்த்தவன் இதை செய்கிறான் என்று கண்டுபிடிக்கிறான். அதன் பிறகு இரண்டு புத்திசாலிகளுக்கு இடையில் நடக்கும் யுத்தம் ஒரு சதுரங்க விளையாட்டைபோல் விறுவிறுப்பாக செல்கிறது. ஒரு கட்டத்தில் யல் (L) தன்னை நெருங்கிவிட்டதை அறிந்த யகாமி தான் தப்பிக்க தன்னுடைய காதலியை கொலை செய்வதோடு படத்தில் முதல் பாகம் நிறைவடைகிறது.
இரண்டாம் பாகத்தில் விறுவிறுப்பு இரட்டைமடங்காகிறது. இன்னொரு ஷிநிகாமியும் தன் புத்தகத்தை பூமியில்விட அது ஒரு பெண்ணிடம் கிடைகிறது வஞ்சனையாக அந்த புத்தகத்தையும் அபகரிக்கும் யகாமி ஒரு கட்டத்தில் அந்த புத்தகத்துடன் வந்த குட்டிசட்டனையே கொலை செய்யும் அளவிற்கு கொடூரமானவனாக மாறுகிறான். முற்றிலும் விறுவிறுப்பாக செல்லு கதையில் யால் (L) யகாமியை பிடிக்க முடிந்ததா எனபது தன் முடிவு.

(எனது பரிந்துரை)
மூன்று பாகங்கள் கொண்ட இந்த படத்தில் இரண்டு பாகம் மட்டுமே பார்த்தல் போதுமானது. படத்தை விட இன்னும் விறுவிறுப்பு தேவைபட்டால் டெத்  நோட் என அதே பெயர் கொண்ட அனிமேஷன் தொடரை பார்க்கலாம் 37 பாகங்கள் கொண்ட அது என்னை பொறுத்த வரை படத்தைவிட சிறந்தது. 
Wednesday, February 2, 2011

ரெக்(2007) ஸ்பானிஷ் திரைப்படம்மொழி - ஸ்பானிஷ் 
இயக்குனர்கள்  - ஜாமே பலகுஎரோ ,ப்கோ பல்சா 

வைரஸ் நோயால் கொடூரமான மிருகமாவது தான் கதை ,பல ஆங்கில படத்தில் பார்த்த கதை தான் என்றாலும் இந்த படத்தில் என்ன வித்தியாசம் இருக்கிறது?டிவி நிகழ்ச்சிக்காக தீ அணைப்பு கட்டிடத்தில் படம் எடுத்து கொண்டிருக்கும் இரண்டு செய்தியாளர்களுக்கு ஏற்படும் பயங்கர அனுபவம் தான் படம்.
அவர்கள் பட பிடிப்பு நடத்தி கொண்டிருக்கும் போது தீ அணைப்பு அலுவலகத்திற்கு பெண் ஒருவர் கட்டிடத்திற்குள் மாட்டிகொண்டதாக அழைப்பு வருகிறது,
உடனே கிளம்பும் தீ அணைப்பு வீரர்களுடன் இரு செய்தியாளர்களும் இணைந்து கொள்கின்றனர் பிறகு அந்த கட்டிடத்தில் நடக்கும் பயங்கரம் தன் கதை.

இது வரை எந்த வித்தியாசமும் இல்லைதான் ஆனால் படம் முழுவதும் அந்த செய்தியாளர்கள் எடுத்து சென்ற கேமராவில்தான் பதிவு செய்யபட்டிருக்கும்.
கதைப்படி இந்த சம்பவத்திற்கு பிறகு நாம் அந்த கேமராவை பிளே செய்து பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும். அருமையான முயற்சி நிச்சியம் பார்க்கவேண்டிய படம்.