Thursday, February 10, 2011

தி ஓல்ட் பாய் (கொரிய த்ரில்லர் திரைப்படம் 18+ )




2003 ஆம் ஆண்டில் வெளியான “தி ஓல்ட் பாய்” - ஒரு த்ரில்லர் திரைப்படம்.
13 விருதுகளை (ஆஸ்கார் அல்ல )வாங்கி குவித்துள்ள இந்த படத்தின் இயக்குனர் சென் - வூக் –பார்க். 


படத்தின் கதாநாயகன் டே சுஹோ (dae-su ho) தன் மகளின் பிறந்த நாள் அன்று குடித்துவிட்டு தெருவில் தகராறு செய்ததற்காக கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் அமர்ந்திருப்பதில் இருந்து படம் துவங்குகிறது. 


அங்குவரும் சுஹோவின் நண்பன் அவரை ஜாமீனில் எடுத்து வீட்டிற்கு அழைத்து செல்கிறார். செல்லும் வழியில் வீட்டிற்கு போன் செய்து பேசிக்கொண்டிருக்கும்போது சுஹோ
மாயமாகிறார். சுஹோவை கடத்திச்சென்றவர்கள் ஹோட்டல் அறைபோன்ற ஒரு இடத்தில் அடைத்து வைக்கின்றனர்.
எத்தனை நாள் தெரியுமா?  சுமாராக 5500 நாட்கள் அதாவது
15 வருடங்கள். 


தான் எதற்காக கடத்தப்பட்டோம்? எங்கு அடைக்கபட்டிருகிறோம்? எப்போது விடுவிக்கபடுவோம்? என்று தெரியாமல், பழிவாங்கும் ஒரே வெறியுடன் உடற்பயிற்சி செய்து, 15 வருடம் டிவியை மட்டுமே நண்பனாகக் கொண்டு, தப்பிக்கும் முயற்சியையும் கைவிடாமல் வாழ்கிறார், சுஹோ.


திடீரென ஒருநாள் ஒரு கட்டிடத்தின் மாடியில் அவர் விடுவிக்கபடுகிறார். அப்போது தன் மனைவி இறந்துவிட்டதையும், மகள் வெளிநாடு சென்றுவிட்டதையும் அறிந்துகொள்ளும் சுஹோ,


தன்னை இந்த நிலைக்கு கொண்டுவந்த மனிதனை, தேடி கண்டுபிடிப்பதே தனது குறிக்கோளாகக் கொண்டு திரிகிறார். 


ஒருநாள் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட செல்லும் சுஹோ, அங்கு மயங்கிவிழுகிறார். அங்கு பணிபுரியும் இளம் பெண்ணான மீதோ(mi-do) தன்னுடைய வீட்டிற்கு அவரை அழைத்து
சென்று பார்த்துக்கொள்கிறாள். 


15 வருடம் பெண்களையே பார்க்காத சுஹோ, மிதோவை கண்டதும்
பாய்கிறார். பின்னர் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு, பழிவாங்கும் வேலையே தொடர்கிறார். இந்த வேலையில் மிதோவும் உதவி செய்ய, தன்னை அடைத்துவைத்த இடத்தையும், அங்கு தனக்கு உணவு அளித்த நபரையும் கண்டுபிடிக்கிறான். சிக்கியவனை பல்வேறு சித்ரவதை செய்து தன்னை இப்படி செய்யச் சொன்னது யார் என கேட்கிறான். 


சிக்கியவன் தனக்கு எதுவும் தெரியாது எனவும் போனில் மட்டுமே தான் பேசியதாகவும் கூறி, தொலைபேசி உரையாடல் அடங்கிய டேபை (Tape) தருகிறான். பிறகு அங்குள்ள அடியாட்களுடன் சண்டைபோட்டு தெருவில் மயங்கிவிழும் சுஹோவை, டாக்ஸி
ஒன்றில் ஏற்றி சரியாக மீதோ விலாசம் கொடுத்து அனுப்புகிறான் ஒருவன்.


இதற்கிடையில் மீடோவுடன் அதிக நெருக்கம் ஏற்பட்டு அவளுடன் உறவுகொள்கிறான் சுஹோ. மீடோவின் வீட்டின் அருகிலேயே தன்னை அடைத்துவைத்திருந்ததை வூஜின் (woo-jin ) கண்டுபிடிக்கிறான். 


தான் அடைத்து வைக்கப்பட்டதன் காரணத்தை ஜூலை 5 ஆம்
தேதிக்குள் சுஹோவே கண்டுபிடிக்கவேண்டும், இல்லை என்றால் மீதோ கொள்ளபடுவாள் என்றும் எச்சரிக்கிறான் வூஜின் .


தன்னுடைய ப்ரொவ்சிங் சென்டர் வைத்திருக்கும் நண்பனின்
உதவியுடன் வூஜின் தன்னுடன் பள்ளியில் வேறு வகுப்பில் படித்தவன் என்று கண்டுபிடிக்கிறான் சுஹோ. பள்ளி  இறுதி  நாளன்று லேபில் வூஜின் தன்னுடைய தங்கையுடன்(soo-ah) உறவில் இருப்பதை பார்த்துவிடும் சுஹோ அதை தன் நண்பனிடம்
கூறுகிறான். 


அது புரளியாக மாறி சகோதரனுடன் உறவில் ஈடுபட்டு ஸோஅஹ் கர்ப்பமாக இருப்பதாக பள்ளி முழுவதும் பரவுகிறது. மனதில் பெரும் குழப்பம் ஏற்படும் ஸோஅஹ்விற்கு உண்மையில் தான் கர்ப்பமாக இருபதைப்போல் தோன்ற தற்கொலை செய்துகொள்கிறாள்.


தான் ஆரம்பித்து வைத்த சிறிய புரளிக்காக 15 வருடம் சிறைபிடிக்கபட்டதை கண்டறியும் சுஹோ நேராக வூஜின் வீட்டிற்கு செல்கிறான். அங்கு சுஹோவிற்கு போட்டோ ஆல்பம் ஒன்று தரப்படுகிறது. அது தன் மகள் சிறுவயது படத்திலிருந்து ஆரம்பிக்கிறது.


சில பக்கங்களை புரட்டியதுமே மீதோ தன்னுடைய மகள் என்று தெரிந்துகொள்கிறான். தன்னுடைய சொந்த மகளிடமே உறவு வைத்துக்கொண்டதை நினைத்து கதறி அழும் சுஹோ, இந்த
உண்மை மீடோவிற்கு தெரிய வேண்டாம் என்று வூஜின் காலில் விழுந்து கதறுகிறான்.


தான் ஆரம்பித்த புரளிக்கான தண்டனையாய் தன் நாக்கை அறுத்துக்கொள்கிறார் சுஹோ. சுஹோவை விட்டு லிப்டில் கீழ் இறங்கும் வூஜின் கண் முன்னே தங்கை இறந்தது நினைவில் கொண்டு வர தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொள்கிறான். பிறகு ஹிப்னாடிசம் உதவியுடன் நடந்ததை சுஹோ மாறாக முயல்வதோடு படம் முடிகிறது.


வழக்கமாக படத்தின் முடிவை நான் சொன்னது இல்லை. இந்த படத்தை பொறுத்தவரை முடிவை சொல்லவில்லை என்றால், இதை பற்றி எழுத முடியாது, ஆகையால்தான் முழு கதையும்
எழுதியுள்ளேன்.


படத்தில் எனக்கு பிடித்தவை :-
                இந்த படத்தின் படத்தொகுப்பு மிகவும் அருமை. காட்சிகளை எடுத்த விதமும் அருமை. சுமார் மூன்று நிமிடம் கட் செய்யாமல் தொடரும் 15 பேருடன் சண்டைபோடும் காட்சி மிகவும் அருமையாக படமாக்கபட்டுள்ளது.


தல அஞ்சா சிங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க படத்தை பதிவிறக்கும் தளத்தை தரலாம் என முடிவு செய்துள்ளேன் இதோ அந்த முகவரிகள்:
                                                                             TORRENT
                                                                          RAPIDSHARE

4 comments:

அஞ்சா சிங்கம் said...

வில்லங்கமான படம் மாதிரி தெரியுதே .....................

உளவாளி said...

அஞ்சா சிங்கம் said...
வில்லங்கமான படம் மாதிரி தெரியுதே ..///////

படத்தை பாத்தா அப்படி தெரியாது .....

அஞ்சா சிங்கம் said...

இந்த படம் எப்படியும் தியேட்டரில் வரபோவது இல்லை அதனால் பார்க்க விருப்பம் இருப்பவர்கள் வசதிக்காக தேடி அலையை வேண்டாம் என்றுதான் லிங்க் குடுக்க சொன்னேன் . இனிமேல் விமர்சனம் செய்யும் மற்ற படங்களுக்கும் இந்த மாதிரி லிங்க் குடுத்தால் நல்லது ..........

உளவாளி said...

இந்த படம் எப்படியும் தியேட்டரில் வரபோவது இல்லை அதனால் பார்க்க விருப்பம் இருப்பவர்கள் வசதிக்காக தேடி அலையை வேண்டாம் என்றுதான் லிங்க் குடுக்க சொன்னேன் . இனிமேல் விமர்சனம் செய்யும் மற்ற படங்களுக்கும் இந்த மாதிரி லிங்க் குடுத்தால் நல்லது .......... ///////////////

கண்டிப்பா .....

Post a Comment