சாப்பிட்டது செறிக்க, தினமும் பீச்ளையும் பூங்காகள்ளையும் ஓட்டமா ஓடுறவங்களுக்கு ஒரு கேள்வி.( இதில் நான் மட்டும் விதிவிலக்கு அல்ல)
ஒரு வேல சாப்பாடு கூட இல்லாதவங்கள பத்தி நினச்சு பாத்துருகோமா?
என்னிடம் பிச்சை கேட்ட ஒரு சிறுவனை அருகில் இருந்த bakery'கு அழைத்து சென்று சாப்பிட வாங்கி கொடுத்த அனுபவம் எனக்கு உண்டு என்னால் அப்போது முடிந்தது அவ்வளவுதான். கண்ணில் படுகிற அனைவர்க்கும் நம்மால் உதவ முடியாது ஆனால் நாம் தினமும் பார்க்கும் அல்லது நம் வீடு அருகில் இருப்பவர்களுக்காவது நாம் உதவலாமே !!
இந்த குறும்படத்தை பார்த்ததில் இருந்து என் மனம் ஏனோ உறுத்துகிறது..
இது வெறும் கதையாக எனக்கு தெரியவில்லை. இதைபோல சம்பவத்தை நான் நேரிலேயே பார்த்ததுண்டு. நான் மட்டும் அல்ல உங்களில் பலரும் இது போன்ற ஒரு சம்பவத்தை பார்த்திருப்பீர்கள். அப்போது நமது உணர்ச்சி எவ்வாறு இருக்கும்?
இல்லாதவர்களை போல நடித்து வங்கி கணக்கு வைத்து A.T.M பயன்படுத்துபவர்களும் உண்டு.
அதற்காக அனைவரையும் அப்படி நினைப்பது தவறு.